மந்திராலயாவில் பிரிண்டர்களை திருடி வந்தவர் கைது
மந்திராலயாவில் பிரிண்டர்களை திருடி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மந்திராலயாவில் பிரிண்டர்களை திருடி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாலிபர் சிக்கினார்
மராட்டிய அரசின் தலைமை செயலகமான மும்பை மந்திராலயாவில் சம்பவத்தன்று சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்து கொண்டு இருந்தார். இதை கவனித்த பாதுகாப்பு வீரர்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது கையில் இருந்த பையை வாங்கி சோதனை போட்டனர். அப்போது அந்த பைக்குள் பிரிண்டர் ஒன்று இருந்தது.
இதுகுறித்து பாதுகாப்பு வீரர்கள் விசாரித்த போது, அவர் மந்திராலாவில் உள்ள பிரிண்டர்களை திருடிச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு வீரர்கள் அவரை மெரின் டிரைவ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
7 பிரிண்டர்கள் திருட்டு
போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்ட வாலிபர் பெயர் சஞ்சய் (வயது35) என தெரியவந்தது. இவர் கோரிக்கை மனு கொடுப்பது போல மந்திராலாவிற்குள் நுழைவார். பின்னர் ஊழியர்கள் யாரும் இல்லாத அலுவலக அறைக்குள் புகுந்து அங்குள்ள பிரிண்டரை எடுத்து வெளியே வருவார். பாதுகாப்பு வீரர்கள் கேட்டால் பழுது பார்க்க கொண்டு செல்வதாக கூறுவார்.
அவர் இதே பாணியில் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்களில் இருந்து 7 பிரிண்டர்களை திருடி சென்றுள்ளார். திருடிய பிரிண்டர்களை மாட்டுங்கா பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

Related Tags :
Next Story