பிளாஸ்டிக் அரிசியா...?
“ஆட்டை கடித்து... மாட்டை கடித்து... கடைசியில் மனிதனை கடித்த கதையாக, வயிற்றிலேயே அடிக்க ஆரம்பித்து விட்டார்களா?”

-இப்போதெல்லாம் கடைவீதிக்கு சென்றால் இந்த புலம்பலை அடிக்கடி கேட்க முடிகிறது. என்னவென்று விசாரித்தால், ‘பிளாஸ்டிக் அரிசி’ என்று ஒரு குண்டை தூக்கிப்போடுகிறார்கள்.
பிளாஸ்டிக் சேர், பிளாஸ்டிக் தட்டு என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதென்ன பிளாஸ்டிக் அரிசி?
இந்தியாவில் தற்போது பல இடங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்னவென்றால், அது இந்த பிளாஸ்டிக் அரிசி பற்றியதுதான்.
இலை, தழை, சாணம் போன்ற இயற்கை உரங்களை போட்டு நெல் பயிர் செய்து சத்தான அரிசி சோறு சாப்பிட்ட காலம் மலையேறி, இப்போது ரசாயன உரங்கள் மூலமே நெல் விளைவிக்கப்படுகிறது. இதனால் நாம் சாப்பிடும் அரிசியில் நமக்கு தெரியாமலேயே ரசாயனம் கலந்து இருக்கிறது. வேறு வழியின்றி நாமும் அதைத்தான் சாப்பிடுகிறோம்.
அந்த காலத்தில் சம்பா அரிசி சோறை சாப்பிட்ட நம் முன்னோர்கள் வெயில், மழை என்று பாராமல் காடுமேடுகளில் அலைந்து திரிந்து உழைத்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். தலைவலி, காய்ச்சல் என்று படுத்தது கிடையாது, மருந்து மாத்திரைகளையும் தொட்டது கிடையாது.
ஆனால் இப்போதைய தலைமுறையின் நிலைமை அப்படியா இருக்கிறது.? ரசாயன உரங்களை போட்டு விளைவிக்கப்படும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்களை உண்ணும் இந்த தலைமுறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் சம்பாத்தியத்தில் கணிசமான தொகையை மருத்துவத்துக்கே செலவிட வேண்டி இருக்கிறது.
இந்த நிலையில், பிளாஸ்டிக் அரிசி புழக்கத்துக்கு வந்து விட்டது என்று சொன்னால் மக்கள் பயந்துவிட மாட்டார்களா என்ன...?
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இரட்டை நகரங்களான ஐதராபாத்-செகந்திராபாத்தில்தான் இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரம் முதலில் புகைய தொடங்கி, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவ தொடங்கி இருக்கிறது.
ஐதராபாத்-செகந்திராபாத் நகரங்களில் உள்ள சில ஓட்டல்களில் பிளாஸ்டிக் அரிசி சோறு பரிமாறப்படுவதாக திடீரென்று பரபரப்பான தகவல் வெளியானது. சமூக ஊடகங்களிலும் இதுபற்றி பலர் ஆர்வத்துடன் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.
இதுபற்றி அந்த மாநில சிவில் சப்ளை துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்ததால் அவர்கள், ஓட்டல்களுக்கு சென்று அங்கு பரிமாறப்படும் சாதத்தை பரிசோதனை செய்தனர். ஆனால் அது பிளாஸ்டிக் அரிசி சாதம் அல்ல என்று தெரியவந்தது.
நல்ல பாம்புக்கும் ‘நல்லது’க்கும் எப்படி சம்பந்தம் கிடையாதோ... பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் பிளாஸ்டிக்கும் எப்படி தொடர்பு கிடையாதோ... அதுபோல்தான் பிளாஸ்டிக் அரிசிக்கும் பிளாஸ்டிக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவது இல்லை.
அப்படி என்றால் பிளாஸ்டிக் அரிசி என்பது என்ன?
அரிசி அரவை ஆலைகளில் நெல்லை அரைத்து அரிசி எடுக்கும் போது, குறிப்பிட்ட அளவிலான அரிசி நொறுங்கி குருணையாக மாறும். கிராமப்புறங்களில் இந்த குருணையை கோழிகளுக்கு தீவனமாக போடுவார்கள்.
ஆனால் எந்த புண்ணியவானோ, இந்த குருணையை ஏன் கோழிகளுக்கு வீணாக தீவனமாக போடவேண்டும் என்று யோசித்து இருக்கவேண்டும். அதன் விளைவாக உருவானதுதான் இந்த பிளாஸ்டிக் அரிசி.
குருணை அரிசியுடன் உருளைக்கிழங்கு, சீனி கிழங்கு என அழைக்கப்படும் சக்கரவள்ளி கிழங்கு, ரசாயனம் (போரிக் ஆசிட்), தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எந்திரத்தில் போட்டு அரைக்கிறார்கள். நன்றாக அரைக்கப்பட்டு கூழ் வடிவத்துக்கு வந்ததும் அதை ஊற்றி உலர வைத்து கிட்டத்தட்ட காகிதம் போல் மாற்றுகிறார்கள். அந்த காகித தகடு நன்றாக உலர்ந்ததும், அதை எந்திரத்தில் கொடுத்து அரிசி போல் சிறு சிறு துண்டுகளாக நொறுக்குகிறார்கள். அப்படி நொறுக்கப்படும் துண்டுகள் பார்ப்பதற்கு உண்மையான அரிசி போலவே இருக்கும். ஒரிஜினல் அரிசிக்கும் இந்த போலி அரிசிக்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது.
எப்படி மரவள்ளி கிழங்கில் இருந்து சவ்வரிசி தயாரிக்கப்படுகிறதோ, அதுபோல்தான் இந்த பிளாஸ்டிக் அரிசியும் தயாரிக்கப்படுகிறது. மற்றபடி பிளாஸ்டிக்குக்கும் இந்த அரிசிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இப்படி பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் முறை பற்றிய வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை உண்டுபண்ணியது. அதைத்தான் பிளாஸ்டிக் அரிசி... பிளாஸ்டிக் அரிசி... என்று சொல்லி பீதியை ஏற்படுத்தி விட்டார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாகவும் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து அங்குள்ள அரிசி அரவை ஆலை அதிபர்கள் சங்கத்தினர், குருணை அரிசியை பயன்படுத்தி மேற்கண்ட முறையில் அரிசி தயாரிப்பதைத்தான் பிளாஸ்டிக் அரிசி என்கிறார்கள் என்றும், மற்றபடி பிளாஸ்டிக் அரிசி என்ற ஒன்று கிடையவே கிடையாது என்றும் விளக்கம் அளித்தனர்.
பிளாஸ்டிக்கில் பாட்டில், விளையாட்டு சாதனங்கள் போன்ற பல பொருட்களை தயாரிக்கலாம். ஆனால் அரிசி தயாரிப்பது என்பது நெல் விளைவிப்பதை விட அதிக செலவு ஆகும். எனவே யாரும் அந்த விபரீத காரியத்தில் இறங்கி கையை சுட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிபுணர்கள் கருத்து.
மேலும் பிளாஸ்டிக்கில் அரிசி தயாரிக்கப்பட்டால் அதை வேகவைக்கவும் முடியாது, சாப்பிடவும் முடியாது. வாயில் வைக்கும் போதே தெரிந்துவிடும்.
எனவே குருணை, உருளைக்கிழங்கு மாவு, போரிக் ஆசிட் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்பட்ட அரிசியைத்தான் பிளாஸ்டிக் அரிசி என்று கூறி மக்களிடம் பீதியை ஏற்படுத்திவிட்டார்கள். பிளாஸ்டிக் அரிசி பார்ப்பதற்கு உண்மையான அரிசியைப் போன்றே இருந்தாலும், போலி அரிசி உடலுக்கு நல்லது அல்ல. சமைக்கும் போதே அதன் யோக்கியதை தெரிந்துவிடும்.
தமிழகத்திலும் இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தலைதூக்கி மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில இடங்களில் கடைகளில் விற்கப்படும் அரிசியை உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் அசல் அரிசியே நன்றாக இருக்கும் போது பிளாஸ்டிக் அரிசி நுழைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், எங்காவது பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் ஏற்கனவே பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு இருக்கிறது.
பெங்களூருவில் பிளாஸ்டிக் அரிசி?
தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் ஏற்கனவே பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்பட்டதாக பரபரப்பான தகவல் வெளியாகி அது சற்று ஓய்ந்த நிலையில், சமீபத்தில் பிளாஸ்டிக் அரிசி பூதம் கிளம்பியது.
அங்குள்ள ஒயிட்பீல்டு பகுதியைச் சேர்ந்த ஒருவர், தான் ஒரு கடையில் அரிசி வாங்கி வந்து வேக வைத்ததாகவும், ஆனால் அது தண்ணீரை உள்வாங்கவில்லை என்றும், சரியாக வேகாமல் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டதாகவும், ஒரு வழியாக சமைத்து முடித்து சாப்பிட்ட போது ரப்பர் போல் வாயில் ஒட்டியதாகவும் புகார் தெரிவித்தார்.
இதுபற்றிய விவரம் தெரியவந்ததை தொடர்ந்து, அவரிடம் இருந்து சிறிதளவு அரிசியை வாங்கி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத்துறை இயக்குனர் எச்.கங்காதரா, இந்தியாவில் பிளாஸ்டிக் உணவுப் பொருட்கள் இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றார். மோசமான அரிசியில் போரிக் ஆசிட் மற்றும் சில பொருட்களை கலந்து சுத்தப்படுத்தி வெண்மையாக்குவதாகவும், அத்தகைய அரிசி மார்க்கெட்டில் விற்கப்படுவதாக கூறப்படுவதாகவும் கூறினார்.
காலாவதியான மற்றும் கெட்டுப்போன முட்டை பார்ப்பதற்கு பிளாஸ்டிக் முட்டை போன்று காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டாக்டர் சைலஜா ஹிட்டல்மணி கூறுகையில், ‘பிளாஸ்டிக் உணவுப்பொருள் என்று எதுவும் கிடையாது எனவும், அப்படி பிளாஸ்டிக் உணவுப் பொருள் இருந்தால் அது சூடாக்கியதும் உருகிவிடும்’ என்றும் தெரிவித்தார்.
பூர்வீகம் சீனா
தொழில்துறையிலும் வேளாண் உற்பத்தியிலும் முன்னணியில் இருக்கும் சீனாதான் இந்த பிளாஸ்டிக் அரிசியின் பூர்வீகம்.
சீனாவில் இருந்து ஏற்றுமதியாகாத பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அந்த நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் எல்லா நாடுகளிலும் கிடைக்கின்றன. உற்பத்தியில் புதிது புதிதான சாதனை படைத்து வரும் சீனர்கள், அரிசியிலும் தங்கள் வேலையை காட்டிவிட்டார்கள்.
‘பிளாஸ்டிக் அரிசி’ என்ற புதுமையான வார்த்தை கடந்த 2010-ம் ஆண்டு சீனாவில்தான் முதன் முதலில் வெளியே வந்தது. அங்குள்ள சில தொழிற்சாலைகளில் குருணை அரிசியுடன், உருளைக்கிழங்கு மாவு, ரசாயனம் ஆகியவற்றை கலந்து அரைத்து உலர வைத்து பின்னர் அதை எந்திரங்கள் மூலம் அரிசி வடிவில் நொறுக்கினார்கள். போலி அரிசி என்று தெரியாமல் இருக்க அதில் சில வாசனைகளையும் சேர்த்தனர். இந்த தொழிலை அவர்கள் மிகவும் ரகசியமாக செய்தனர். அந்த அரிசி பார்ப்பதற்கு அசல் அரிசியைப் போலவே இருந்தது. அந்த அரிசியை அவர்கள் ‘உச்சங் அரிசி’ என்று அழைத்தார்கள்.
இப்படி பல நிறுவனங்கள் ரகசியமாக பிளாஸ்டிக் அரிசியை தயாரித்து, உண்மையான அரிசி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தன.
சீனாவில் ஷான்சி மாகாணத்தில் உள்ள தையான் நகரில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக 2011-ம் ஆண்டில் ‘கொரியா டைம்ஸ்’ என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.
கடந்த டிசம்பர் மாதம், நைஜீரியா நாட்டுக்கு கப்பலில் வந்த ஏராளமான பிளாஸ்டிக் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்ட பி.பி.சி. டெலிவிஷன், உலகில் மிக அதிக அளவில் பிளாஸ்டிக் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது இதுதான் முதல் தடவை என்றும் கூறியது.
ஆனால் இதை மறுத்த நைஜீரிய அரசு, கப்பலில் பறிமுதல் செய்யப்பட்டது பிளாஸ்டிக் அரிசி அல்ல என்றும், கெட்டுப்போன அரிசியே என்றும் விளக்கம் அளித்தது.
அதன்பிறகு, உலக அளவில் பிளாஸ்டிக் அரிசி பற்றிய தகவல் பரவவில்லை. ஆனால் சமீப காலமாக ‘யூ டியூப்’ சமூக வலைத்தளத்தில், பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் விதம் பற்றியும், அந்த அரிசியை கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றிய வீடியோக்களும் வெளியாயின. இதனால் அதுபற்றிய தகவல்களும், விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதனால்தான் பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தற்போது விசுவரூபம் எடுத்து இருக்கிறது.
ஆனால் இந்தியாவில் இதுவரை எங்காவது பிளாஸ்டிக் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி?
பிளாஸ்டிக் அரிசியா என்பதை வீட்டில் இருந்தே அனைவரும் கண்டுபிடிக்கலாம். அதற்கான வழிமுறைகள் வருமாறு:-
* நன்றாக கொதிக்கவைத்து வேகவைத்த அரிசியை யார் கையும் படாதவாறு ஒரு பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும். பின்னர் 3 நாட்களுக்கு பிறகு அதை எடுத்து பார்க்கும்போது, அந்த அரிசி எந்த வித பூஞ்சை தாக்குதலுக்கும் ஆளாகவில்லை எனில் அது பிளாஸ்டிக் அரிசி என உறுதிபடுத்தலாம்.
* ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து அதில் தீக்குச்சியை பற்ற வைக்க வேண்டும். அப்போது பிளாஸ்டிக் வாசனை வருகிறதா என பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
* சிறிது அரிசியை எடுத்து அதன் மீது சூடான எண்ணெயை ஊற்றும்போது, அந்த அரிசி உருகினால் அது பிளாஸ்டிக் அரிசிதான்.
* சாதாரண அரிசி சமைத்த பின்னர் கையில் ஒட்டும். ஆனால் பிளாஸ்டிக் அரிசி ஒட்டாது. எவ்வளவு நேரம் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும். சமைத்தபிறகு பிளாஸ்டிக் அரிசி என சந்தேகம் வந்தால், அதனை பந்துபோல் உருட்டி தரையில் போட வேண்டும். அப்போது துள்ளிக் குதித்தால் அது பிளாஸ்டிக் அரிசிதான்.
* பாத்திரத்தில் அரிசி கொதிக்கும்போது, அந்த பாத்திரத்தில் லேயர் படிந்தால் அது பிளாஸ்டிக் அரிசி.
* ஒரு பாட்டில் முழுவதும் தண்ணீர் நிரப்பி அதில் கொஞ்சம் அரிசியை கொட்டி சிறிது நேரம் கலக்க வேண்டும். அப்போது அரிசி தண்ணீரில் மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி என கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால் சாதாரண அரிசி தண்ணீரில் மிதக்காது.

Related Tags :
Next Story