போராட்ட நாயகியின் முகநூல் காதல்
சிந்துஜாய் என்ற கேரள பெண் அரசியல்வாதிக்கு முன்பு முக்கியமான இரண்டு அடையாளங்கள் இருந்தன. ஒன்று, அவர் சிவப்பு கொடிபிடித்து கம்யூனிஸ்டு காரராக போராட்ட களத்தில் பெரும் வேகம் காட்டியது.
சிந்துஜாய் என்ற கேரள பெண் அரசியல்வாதிக்கு முன்பு முக்கியமான இரண்டு அடையாளங்கள் இருந்தன. ஒன்று, அவர் சிவப்பு கொடிபிடித்து கம்யூனிஸ்டு காரராக போராட்ட களத்தில் பெரும் வேகம் காட்டியது. இரண்டு, எப்போதும் மாறாத புன்னகையோடு காட்சி யளித்தது. பின்பு காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்று விவாதங்களில் சிக்கினார். திடீரென்று 6 ஆண்டுகள் அவர் இருந்த இடம் தெரியவில்லை.
“இதோ நான் வந்து விட்டேன். என்னை மக்கள் தேடிக்கொண்டிருந்த காலத்தில் நான் ஒருவித ஏகாந்த நிலையில் இருந்தேன். படிப்பையும், வேலையையும் தேடி அலைந்தேன். வாழ்க்கையுடனான போராட்டமும் தொடர்ந்து கொண்டிருந்தது..” என்று கூறும் அவரிடம், முன்பைவிட அதிக மகிழ்ச்சி தென்படுகிறது. அதற்கு காரணம் அவரது வாழ்க்கையில் முகநூல் வழியாக ஒரு காதல் புகுந்திருக்கிறது. அந்த காதல் அவருக்குள் புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் உருவாக்கியிருக்கிறது. சிந்துஜாயிடம் போட்டிப்போடும் அளவுக்கு சிரிக்கும் அந்த காதலரது பெயர்: சாந்திமோன் ஜேக்கப்.
“சிந்துஜாய் சிறுவயதிலே அனாதையாக்கப்பட்டவர். அதனால் பல கஷ்டங்களை தாங்கிவந்தவர். அரசியலில் ஜொலித்ததால் அவரது உண்மையான வாழ்க்கைநிலை யாருக்கும் தெரியாமலே போய்விட்டது. அதை எல்லாம் தெரிந்ததும் அவரை தாங்கிப்பிடித்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது” என்று கூறும் ஜேக்கப் தன் மனைவியை மூன்று வருடங்களுக்கு முன்பு இழந்தவர். இங்கிலாந்தில் வசிக் கிறார். திருமணம் செய்துகொண்டு சிந்துஜாயையும் அங்கு அழைத்துச்சென்றுவிடுவார்.
‘உங்களுக்கு வெகுதாமதமாக அல்லவா காதல் வந்திருக்கிறது’ என்று சிந்துஜாயிடம் கேட்டால், “அரசியலில் மூழ்கிப்போய்விட்டதால் காதலிக்க மறந்துவிட்டது. இப்போதுதான் அதற்கான நேரம் வந்திருக்கிறது” என்கிறார்.
இவர்களுக்குள் முகநூல் காதல் எப்படி அரும்பியது?
ஜேக்கப்:
“தேவாலயத்தில் நாங்கள் பிரார்த்தனை முடிந்து வெளியே வரும்போது என் மனைவி பிரியா இறந்தார். அந்த நினைவுகளை எல்லாம் நான் முகநூலில் பதிவுசெய்தேன். அவைகளை தொடர்ந்து சிந்து படித்து வந்திருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் சிந்துவின் அம்மா மரணமடைந்தார். அதை இவர் பதிவு செய்திருந்தார். அதை படித்துவிட்டு, ‘கண்ணீர் வந்துவிட்டது’ என்று நான் பதிவு செய்தேன். அன்று இரவு, ‘என் கவலையில் பங்குகொண்டதற்கு நன்றி’ என்று பதில் அளித் திருந்தார். அதுதான் எங்கள் நட்பின் தொடக்கம்.
அடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொன்னேன். தனக்கு கிறிஸ்துமஸ் அவ்வளவு மகிழ்ச்சி தரவில்லை என்றார். அதை தொடர்ந்து நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டோம். நான் நெகிழ்ந்துபோனேன். தனிமையில் உழன்று கொண்டிருந்த எனக்கு அவரது மனநிலையை உணர்ந்துகொள்ள முடிந்தது. அப்போதுதான் சிந்துவை திருமணம் செய்துகொள்வதுதான் என் வாழ்க்கையில் நான் செய்யப்போகும் பெரிய காரியம் என்ற எண்ணம் உருவானது.
சிந்துஜாய்: ஒருநாள் இவர் என்னிடம், திருமணத்தை பற்றி என்ன நினைக் கிறீர்கள்? என்று கேட்டார். எனக்கு அதை பற்றிய பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. பொருத்தமானவர் கிடைத்தால் போதும் என்றேன். அப்போது ஜேக்கப், ‘சிந்துவை திருமணம் செய்துகொள்ள ஒருவர் விரும்புகிறார், அது நான்தான்’ என்றார். நான் இதை எதிர்பார்க்காததால் முதலில் அதிர்ந்தேன். பின்பு என் உறவினர்களிடம் சொன்னேன். அவர்கள் விசாரித்தார்கள். அடுத்து நானும் சம்மதித்தேன்.
திருமணம் தேவையில்லை என்ற முடிவை முன்பு எடுத்திருந்தீர்களா?
சிந்துஜாய்: என் வயது பெண்களில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் போட்டியிட்டது நான் மட்டுமே. அதனால் ஏகப்பட்ட சவால்களையும், பிரச்சினை களையும் நான் சந்திக்கவேண்டியிருந்தது. அன்று திருமண ஆலோசனைகளோடு என்னை அணுகிய சிலர், ‘நீங்கள் தொடர்ந்து அரசியலில் இருப்பீர்கள்தானே?’ என்று கேட்டார்கள். எதிர்காலத்தில் பல்வேறு தொழில் வளர்ச்சிக்கு என்னை பயன் படுத்திக்கொள்வது அவர்கள் எண்ணமாக இருந்தது. சிலர், நான் அரசியலில் இருப்பதால் மோசமாகவும் விமர்சித்தார்கள். அதனால் நான் திருமண சிந் தனைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, கவுன்சலிங் தொடர்பான கல்வியை கற்றேன். பள்ளி மாணவர்களுக்கும், சிறை கைதிகளுக்கும் மனநல ஆலோசனை வழங்கினேன். வேலையும் தேடினேன். ஆனால் கேரளாவில் வேலை தர யாரும் முன்வரவில்லை. அதற்கு நான் புரட்சிப் பெண் என்று பெயரெடுத்திருந்ததுதான் காரணம். சில நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் எனக்கு தெரிந்தவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் நான் வேலைகேட்டபோது, ‘சிந்துவுக்கு எதற்கு வேலை?’ என்று கேட்டார்கள். எனக்கு அவர்கள் வேலை தந்தால் அங்கு ஊழியர்களை ஒன்றிணைத்து விடுவேன், போராட்டம் நடத்துவேன் என்றெல்லாம் நினைத்துவிட்டார்கள். எனக்கு அரசியல்வாதி என்ற முத்திரை இருந்ததால் யாரும் வேலைதரவில்லை.
ஆறு வருடங்களாக நான் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தேன். வீட்டு வாடகை கொடுக்கக்கூட பணமில்லை. வேறு வீட்டிற்கும் செல்ல முடியவில்லை. தனியாக இருக்கும் பெண்ணுக்கு வீடு தர மறுத்தார்கள். நான் தனியாக இருக்கிறேன் என்று சொல்லவும் தயங்கினேன். இத் தனைக்கு மத்தியிலும் நான் சிரித்துக்கொண்டிருக்கும் போட்டோவை மட்டும் முகநூலில் பதிவு செய்துகொண்டிருந்தேன்.
திருமணம் பற்றி முடிவெடுத்த பின்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது?
சிந்துஜாய்: இப்போது முழுநேரமும் போனில் பேசிக்கொண்டிருக்கிறேன். அதனால் சற்று குண்டாகிவிட்டேன். எங்கள் இருவருக்கும் இடையேயான நட்பு தொடர்ந்துகொண்டிருந்தால் பலரும் பலவிதமாக பேசத்தொடங்கி விடுவார்கள். அப்படி ஒரு பேச்சு தேவையில்லை என்பதற்காக திருமண முடிவை எடுத்தோம். எத்தனை காலம்தான் தனியாக வாழமுடியும். தனிமை வாழ்க்கை ரொம்ப போரடிக்கிறது. வாழ்க்கையில் மாற்றம் தேவை. இதுவரை என் வாழ்க்கையில் எனக்கொரு வழிகாட்டி இல்லாமல் இருந்தது. இப்போது ஒருவர் இருக்கிறார். இனி நான் அழவேண்டியது இருக்காது அல்லவா!

Related Tags :
Next Story