மோட்டார் சைக்கிள்– ஜீப் மோதல்: தனியார் குளிர்பான முகவர் சாவு இறந்த உறவினரின் உடல் அடக்கத்துக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
ஆழ்வார்தோப்பு அருகே, இறந்த உறவினரின் உடல் அடக்கத்துக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பியபோது, ஜீப் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார்.
தென்திருப்பேரை,
ஆழ்வார்தோப்பு அருகே, இறந்த உறவினரின் உடல் அடக்கத்துக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பியபோது, ஜீப் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார்.
குளிர்பான முகவர்தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள ஆழ்வார் தோப்பை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஜெபநேசன் (வயது 24). திருமணமாகாதவர். இவர் தனியார் குளிர்பான முகவராக பணியாற்றி வந்தார்.
உறவினர் சாவுநேற்று முன்தினம் நாசரேத்தில் உள்ள ஜெபநேசனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, செல்வராஜ் குடும்பத்தினருடன் ஆழ்வார்தோப்பிலுள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கிருந்து அனைவரும் நாசரேத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு, இறந்த உறவினரின் உடல் அடக்கத்தில் கலந்து கொண்ட பின், ஜெபநேசன் ஆழ்வார் தோப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஜீப் மோதி சாவுஆழ்வார்தோப்பிற்கும், செம்பூருக்கும் இடையே உள்ள யானை பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஜீப்பும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெபநேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
தப்பி ஓடிய டிரைவர்ஜீப்பில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த ஜெபநேசனின் உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த ஜீப்பை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து தொடர்பாக ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜீப் உரிமையாளர் யார்? மோட்டார் சைக்கிள் மீது ஜீப்பை மோதிவிட்டு தப்பி ஓடிய டிரைவர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த உறவினரின் உடல் அடக்கத்து வந்து விட்டு திரும்பியபோது, விபத்தில் சிக்கி தனியார் குளிர்பான முகவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.