அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி மோட்டார் சைக்கிள் பேரணி
நம்பியூர் அருகே அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
நம்பியூர்,
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் ஆட்சி காலத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தேவையான நிதி ஒதுக்கப்படாததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது,
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் இந்த திட்டத்துக்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
மோட்டார் சைக்கிள் பேரணி
எனவே அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி அதன் போராட்டக்குழு கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள குட்டைகளில் ‘நீர் தேடி போவோம் இல்லையேல் வேறு ஊர் தேடி போவோம்’ என்று பெயர் பலகை வைத்துள்ளனர். மேலும் அத்திக்கடவு-அவினாசி திட்ட போராட்டக்குழு கூட்டமைப்பு சார்பில் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நம்பியூர் அருகே உள்ள தைலாம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று காலை தொடங்கியது. இந்த பேரணியில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பெண்கள், அத்திக்கடவு-அவினாசி போராட்டக்குழு கூட்டமைப்பினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
மோட்டார் சைக்கிள் பேரணி பெரியசெட்டிபாளையம், எம்மாம்பூண்டி, வெள்ளாளபாளையம், ஒழலக்கோவில், வரப்பாளையம் உள்ளிட்ட 30 ஊர்கள் வழியாக சென்று மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.
இதுபற்றி அத்திக்கடவு-அவினாசி போராட்டக்குழு கூட்டமைப்பினர் கூறும்போது, “ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 254 இடங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒரு பெரிய கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். நம்பியூர் அருகே இந்திராநகர் காலனிக்கு அத்திக்கடவு நகர் என்றும் பெயர் மாற்றியுள்ளோம். இந்த பேரணியில் தானாக முன்வந்து இளைஞர்கள் கலந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எனவே உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Tags :
Next Story