விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Jun 2017 4:00 AM IST (Updated: 12 Jun 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி கட்டி கானப்பள்ளி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் புதிய வீட்டு வசதி வாரிய 2-வது குடியிருப்பு பகுதியில் ஸ்ரீவினை தீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிதாக கட்டப்பட்டு உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவில், காலபைரவர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி கடந்த 8-ந் தேதி கோவில் நந்தவனத்திறப்பு நிகழ்ச்சியும், சுப்பிரமணிய சாமி மற்றும் காலபைரவர் ஊர்வலமும் நடந்தது. 9-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமமும், முதல் கால யாக பூஜையும் நடந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜையும், தீபாராதனையும், விசேஷ சாந்தி, மூன்றாம் கால யாக பூஜையும், அஷ்டபந்தன சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜையும், கலச புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து காலை 8.15 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவையொட்டி விநாயகர், முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story