குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும்
திருவள்ளூர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல் மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு தீங்கிழைப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வும், ஆலோசனைகளும் அளித்து குழந்தை பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வை பொது இடங்களிலும், திரையரங்குகளிலும் குறும்படங்கள் மூலமும், நாளிதழ்கள் மூலமும் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில், குடும்பநல துணை இயக்குனர் தயாளன் மற்றும் தொண்டு நிறுவனத்தினர், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.