ஹூரேகுண்டபைலு பகுதியில் நடந்து வரும் பத்ரா கால்வாய் திட்டப்பணிகள் ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் மந்திரி ஜெயச்சந்திரா தகவல்
ஹூரேகுண்டபைலு பகுதியில் நடந்து வரும் கால்வாய் திட்ட பணிகள் ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.
சிக்கமகளூரு,
ஹூரேகுண்டபைலு பகுதியில் நடந்து வரும் கால்வாய் திட்ட பணிகள் ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.
மந்திரி ஜெயச்சந்திரா பேட்டிசித்ரதுர்கா தாலுகா ஹூரேகுண்டபைலு கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு மாநில சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்யவந்தார். சாமி தரிசனம் முடிந்த பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
சித்ரதுர்கா, துமகூரு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா பத்ரா அணைக்கட்டில் இருந்து ரூ.2 ஆயிரத்து 300 கோடி செலவில் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஹூரேகுண்டபைலு பகுதியில் சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்தில் சுரங்க பாதையாக பத்ரா கால்வாய் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்ட பணிகள் வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் முடிவடைய வேண்டும்.
ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும்ஆனால் சுரங்க பாதை அமைக்கும் பணியின்போது அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பணிகள் அடுத்த ஆண்டு(2018) ஜனவரி மாதம் நிறைவடையும். இதேபோல் கர்நாடக மத்திய மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.3,700 கோடி செலவில் எத்தினஒலே திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது ரூ.2,300 கோடி செலவில் எத்தினஒலே குடிநீர் பணிகள் நிறைவடைந்து உள்ளது. இந்த கால்வாய் திட்ட பணிகள் எங்கள் ஆட்சி காலத்திற்குள் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.