உளுந்தூர்பேட்டை அருகே தடுப்புக்கட்டையில் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு


உளுந்தூர்பேட்டை அருகே தடுப்புக்கட்டையில் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 12 Jun 2017 4:00 AM IST (Updated: 12 Jun 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே தடுப்புக்கட்டையில் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

உளுந்தூர்பேட்டை,

கன்னியாஸ்திரி

சென்னை நந்தீவரம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் ஜோஸ்பின் ஜேம்ஸ்மேரி(வயது 40). கன்னியாஸ்திரியான இவர் சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பேராசிரியரான சென்னை திருநிலையை சேர்ந்த ராஜாராவ் மகன் பாரி(40), அரக்கோணம் தக்குளத்தை சேர்ந்தவரும், சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான வரதன் மகன் வேதகிரி(54) ஆகியோருடன் திருச்சிக்கு ஒரு காரில் சென்றார். காரை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சேத்பட்டை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ஸ்டீபன்ராஜ்(34) என்பவர் ஓட்டினார்.

மேலும் ஒருவர் சாவு

நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாரி, ஜோஸ்பின் ஜேம்ஸ்மேரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஸ்டீபன்ராஜ், வேதகிரி ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்டீபன்ராஜ் உயிரிழந்தார்.

வேதகிரி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 3 பேர் பலியான இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, தீவிர சிகிச்சை பெற்று வந்த வேதகிரி நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

Next Story