குரூப்-8 போட்டி தேர்வு: திருவாரூர் மாவட்டத்தில் 519 பேர் எழுதினர்


குரூப்-8 போட்டி தேர்வு: திருவாரூர் மாவட்டத்தில் 519 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 12 Jun 2017 4:15 AM IST (Updated: 12 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் குரூப்-8 போட்டி தேர்வை 518 பேர் எழுதினர். இதில் திருவாரூரில் நடந்த தேர்வு மையத்தை அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்்வாணையம் குரூப்-8 (கிரேடு 3) போட்டி தேர்வு நேற்று நடந்தது. திருவாரூர்் மாவட்டத்தில் ஒரு தேர்்வு மையத்தில் மட்டுமே நடைபெற்றது. இதில் 57 தேர்்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்்வுக்கு விண்ணப்பித்திருந்த 1,131 பேர்களில் 519 பேர் மட்டுமே தேர்்வு எழுதினர்். இந்த தேர்்வு மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்் சுப்பையா, கலெக்டர் நிர்்மல்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் தேர்்வாணைய உறுப்பினர்் சுப்பையா கூறியதாவது:-

தேர்்வு மையத்தில் தடையில்லா மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்வினை கண்காணிக்க ஒரு பறக்கும் படை அலுவலர்், 1 சுற்றுக்குழு அலுவலர்்கள் (மொபைல் டீம்), 57 அறை கண்காணிப்பாளர்்கள், 3 முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் , ஒரு கண்காணிப்பு அலுவலர் தேர்்வு பணிகளில் ஈடுபடுத்தபட்டனர். தேர்்வு முழுவதும் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளி தேர்வாளர்களுக்கு தரை தளத்தில் தேர்வு எழுத வசதியும், பார்்வையற்றோர் தேர்வு எழுத மாற்று நபர் தனி அறைகள் கொண்ட வசதியும் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, உதவி கலெக்டர் முத்து மீனாட்சி, தமிழ்நாடு அரசு தேர்வாணைய பிரிவு அலுவலர் குழந்தைவேலு ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story