மொபட்டில் சென்றபோது வாகனம் மோதியது: அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் பலி


மொபட்டில் சென்றபோது வாகனம் மோதியது: அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் பலி
x
தினத்தந்தி 12 Jun 2017 4:30 AM IST (Updated: 12 Jun 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே மொபட்டில் சென்றபோது வாகனம் மோதி அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் பலியானார்.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளியை அடுத்த நார்த்தம்பட்டியை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 60). நல்லம்பள்ளி ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளரான இவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். தர்மபுரி மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் இயக்குனராகவும் இருந்தார். இவர் நேற்று காலை தொப்பூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மொபட்டில் புறப்பட்டார்.

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டைமேடு என்ற பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வந்தனர்.

பரிதாப சாவு

ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே பூங்காவனம் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் அவர் பலியானது குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மீது மோதிய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த பூங்காவனத்திற்கு சுசீலா என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.


Related Tags :
Next Story