ஊட்டியில் அணைகளை தூர்வாரும் பணி மும்முரம் கலெக்டர் சங்கர் நேரில் ஆய்வு
ஊட்டியில் அணைகளை தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனை நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். குளு, குளு நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டியின் தண்ணீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்து வருகிறது. அதில் குறிப்பாக, பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, கோடப்பமந்து அப்பர் அணை, கோரிசோலா அணை, தொட்டபெட்டா அப்பர் அணை உள்பட பல்வேறு அணைகள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள அணைகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான மார்லிமந்து அணை, கோடப்பமந்து அப்பர் அணை மற்றும் கோரிசோலா அணைகளை தூர்வாரும் பணி கடந்த வாரம் தொடங்கியது. அதற்கு நகராட்சி சார்பில், ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் மார்லிமந்து அணை மற்றும் கோரிசோலா அணைகளில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம், தென்மேற்கு பருவமழை காலங்களில் அணைகளில் அதிகளவில் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். இதனால் அணைகளை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து கலெக்டர் சங்கர் கூறியதாவது:-
9.60 ஏக்கர் பரப்பளவு கொண்ட மார்லிமந்து அணை மற்றும் 2.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோரிசோலா அணையை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு மண்ணை தோண்டி, தூர்வாரும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின் மூலம் அணையில் 2 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீரை அதிகமாக சேமித்து வைக்க முடியும். அணைகளில் தூர்வாரப்பட்ட மண் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றதாகும். எனவே, விவசாயிகள் ஊட்டி தாசில்தாரிடம் அனுமதி பெற்று, இந்த மண்ணை பெற்று சென்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, ஊட்டி நகராட்சி பொறியாளர் ரூபன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story