மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’ பெயரை ‘பாரத்வார்’ என மாற்ற வேண்டும் பா.ஜனதா எம்.எல்.ஏ. கோரிக்கை


மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’ பெயரை ‘பாரத்வார்’ என மாற்ற வேண்டும் பா.ஜனதா எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2017 3:35 AM IST (Updated: 12 Jun 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’ பெயரை ‘பாரத்வார்’ என மாற்ற வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை,

மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’ பெயரை ‘பாரத்வார்’ என மாற்ற வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.எல்.ஏ. கோரிக்கை

மும்பை கொலபா பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்ட ‘கேட்வே ஆப் இந்தியா’ ஆர்ச் உள்ளது. இது மும்பையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இதை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இந்தநிலையில் ‘கேட்வே ஆப் இந்தியா’ ஆர்ச்சின் பெயரை மாற்ற வேண்டும் என கொலபா எம்.எல்.ஏ. ராஜ் புரோகித் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘பாரத்வார்’ என மாற்றம்

இது குறித்து அவர் கூறியதாவது:–

‘கேட்வே ஆப் இந்தியா இங்கிலாந்து மன்னர் 5–ம் ஜார்ஜ், ராணி விக்டோரியா வருகையை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டதாகும். இது நாம் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்ததன் நினைவிடமாக உள்ளது. காலனி ஆதிக்கத்தில் இருந்து நாம் வெளியே வரவேண்டும். ஆங்கிலேயர்களால் பம்பாய் என அழைக்கப்பட்ட இந்த நகரம் மும்பை என பெயர் மாற்றப்பட்டது. அதுபோல ‘கேட்வே ஆப் இந்தியா’வும் ‘பாரத்வார்’ என பெயர் மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனாவினர்...

ராஜ் புரோகித் எம்.எல்.ஏ. ஏற்கனவே மெரின் லைன்ஸ் ரெயில் நிலையத்தை மும்பாதேவி என பெயர் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதேபோல பா.ஜனதா, சிவசேனா கட்சியினர் மும்பை சென்ட்ரல், சர்னிரோடு, கரிரோடு, சான்ட்ரஸ்ட் ரோடு, காட்டன் கிரீன், ரே ரோடு ஆகிய புறநகர் ரெயில்நிலையங்களின் பெயர்களையும் மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

ஓஷிவாரா ரெயில் நிலையத்திற்கு ஏற்கனவே ராம்மந்திர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story