லோனாவாலாவில் காதல் ஜோடி கொலை: 2 மாதங்களுக்கு பிறகு 2 பேர் கைது
லோனாவாலாவில் காதல் ஜோடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாதங்களுக்கு பிறகு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனே,

காதல் ஜோடி கொலை
புனே, லோனாவாலாவில் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிவாஜி என்ற இடத்திற்கு அருகே உள்ள காட்டு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி காதல் ஜோடி நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் லோனாவாலாவில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சார்தக் (வயது24), ஸ்ருதி(23) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மாணவி ஸ்ருதி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருந்தார். மேலும் காதல் ஜோடியின் செல்போன், பணம் ஆகியவையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
2 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து லோனாவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்தனர். ஆனால் துப்பு துலங்கவில்லை. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 14 அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் லோனாவாலா இரட்டை கொலை வழக்கு தொடர்பாக போலீசார் ஆசிப் சேக், சலீம் சேக் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.
2 பேரும் லோனாவாலா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். போதை ஆசாமிகளான இவர்கள் பணத்திற்காக காதல் ஜோடியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story