வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்: தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
போடி அருகே வேன்- மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலியாகினார்.
போடி,
தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்த பாஸ்கரன் மகன் சக்திவேல் (வயது 25). விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அரசூரை சேர்ந்த குமார் என்பவரின் மகன் மோகன் (22). நண்பர்களான இவர்கள் 2 பேரும், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் சக்திவேலின் உறவினர் திருமணத்துக்கு மோகன் வந்து இருந்தார். இவர்கள் போடி அருகே உள்ள குரங்கணிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக சக்திவேலும், மோகனும் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். சக்திவேலின் நண்பரான போடி குலாளர்பாளையத்தை சேர்ந்த விமல் (22) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
2 பேர் பலி
குரங்கணியை சுற்றி பார்த்து விட்டு அவர்கள் தனித்தனியாக மோட்டார் சைக்கிள்களில் நேற்று மாலை தருமத்துப்பட்டி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சக்திவேல் ஓட்டினார். மோகன் பின்னால் அமர்ந்திருந்தார். போடி-முந்தல் மலைச்சாலையில் ஆண்டி ஓடை என்னுமிடத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் புல்கூரில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு சென்ற சுற்றுலா வேனும், சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியது. மேலும் பின்னால் வந்த விமலின் மோட்டார் சைக்கிளும், சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மோகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். சக்திவேல், விமல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். விமலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக குரங்கணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்தில் வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

Related Tags :
Next Story