வெம்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வெம்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி கிராமமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெம்பாக்கம்,
வெம்பாக்கம் அருகே உள்ள மேனலூர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க வருபவர்களால் கிராம மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது என்று கடந்த மாதம் 21-ந் தேதி கிராமமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
அப்போது டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், விரைவில் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை டாஸ்மாக் கடையை வேறுபகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
கிராமமக்கள் முற்றுகை
இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணி அளவில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். பின்னர் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த நிலையில் 12 மணி அளவில் டாஸ்மாக் கடையை திறக்க விற்பனையாளர் வந்தார். கடையை திறக்க கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெம்பாக்கம் தாசில்தார் பெருமாள், செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தூசி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
நடவடிக்கை
அப்போது கிராமமக்கள் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றினால் தான் முற்றுகை போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள். அதற்கு அதிகாரிகள் டாஸ்மாக் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் கடையின் விற்பனையாளர் கடையை திறந்தார்.

Related Tags :
Next Story