மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு இணைந்து கவர்னர் பணியாற்றவேண்டும் அரசு ஊழியர்கள் விருப்பம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு இணைந்து கவர்னர் பணியாற்ற வேண்டும் என்று அரசு ஊழியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி,
அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ஏற்புடையதல்ல
புதுவையில் அரசுத்துறை இயக்குனர்கள் மட்டத்தில் இயங்கும் ஊழியர் குறைதீர்ப்பு குழுக்கள் கூடுவதே இல்லை. இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய துறை செயலாளரோ, அதை கண்காணிக்க வேண்டிய தலைமை செயலாளரோ அப்பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் பலதுறைகளில் கோரிக்கைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு, அது மீறப்படும்போதுதான் அமைச்சர்கள் மட்டத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அதன்பின்னர் முதல்-அமைச்சரிடம் வருகிறோம்.
இந்தநிலையில் அலுவலக நேரங்களில், முதல்-அமைச்சர், அமைச்சர்களை அரசு ஊழியர்கள் சந்திக்கக்கூடாது. குறைகளை அதிகாரிகளிடம்தான் தெரிவிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். இது தற்போதுள்ள சூழ்நிலையில் ஏற்புடையதல்ல. அதிகாரிகள் மட்டத்தில் பேசியும் கோரிக்கைகள் தீர்க்கப்படாதபோது யாரிடம் சொல்லி முறையிடுவது?
முதல்- அமைச்சர் மாற வேண்டும்
அரசு ஊழியர்கள் தங்கள் குறைகளை மாலை 5 மணிக்கு மேல் அமைச்சர்களை அவர்களது அலுவலகத்தில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால் அந்த சமயங்களில் அமைச்சர்கள் அலுவலகத்தில் இருப்பதில்லை.
எனவே முதல்-அமைச்சர் தனது நிலைப்பாட்டை மாற்றி அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை முறைப்படுத்தும் வகையில் அரசு ஊழியர் சங்கத்தினரை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும். கவர்னர் தொகுதிக்கு வந்தால் மறியல் செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் பேசியுள்ளது ஏற்புடையதல்ல. கவர்னர் மக்கள் நலன் சார்ந்து இயங்கும்போது அதை அரசியல் ரீதியாக அணுகுவது முறையல்ல. கவர்னரின் செயல்பாடும் விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது. சட்டமன்றமும், கவர்னரும் இணைந்து புதுச்சேரி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று கவர்னர் பேசுவதும் சரியல்ல.
இணைந்து பணியாற்ற வேண்டும்
அமைச்சரவை அனுப்பும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதினால் முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் கலந்துபேசி முறைப்படுத்தி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதை செய்யாமல் கோப்புகளை திருப்புவதும், மத்திய அரசுக்கு அனுப்புவதும் கால தாமதத்திற்கு வழிவகுக்கும். அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஊழல்பேர்வழிகள் என்று கூறுவதும் கவர்னர் பதவிக்கு அழகல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு கவர்னர் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும், கொல்லைப்புற நியமனங்களை ரத்துசெய்யவேண்டும், அரசியல்ரீதியாக பழிவாங்கும் போக்கினை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(செவ்வாய்கிழமை) தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு பாலமோகனன் கூறினார்.

Related Tags :
Next Story