டிராக்டர் மோதி டிப்ளமோ என்ஜினீயர் சாவு: சேலம் அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை
டிராக்டர் மோதி டிப்ளமோ என்ஜினீயர் பலியான சம்பவத்தை தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது, அவர்கள் என்ஜினீயரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் வேம்படிதாளம் செம்பாய வளவு பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 24). சிவில் என்ஜினீயரிங்கில் டிப்ளமோ படித்துள்ளார். இவர், சேலம் மாமாங்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை கவனிக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற நரேஷ்குமார், அங்கு கட்டுமான பணிகளை கவனித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு மணல் ஏற்றி வந்த டிராக்டர் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை உடன் பணிபுரிந்த ஊழியர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். ஆனால், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி நரேஷ்குமார் உயிரிழந்தார்.
உறவினர்கள் போராட்டம்
இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், நேற்று காலை நரேஷ்குமாரின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர், அவர்கள் அவரது உடலை வாங்க மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து நரேஷ்குமாரின் உறவினர்கள் கூறியதாவது:-
நிவாரணத்தொகை வேண்டும்
கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த டிராக்டர் நரேஷ்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்துவிட்டார். நரேஷ்குமார் இறந்தும், கட்டிட உரிமையாளர் இதுவரை வந்து பார்க்கவில்லை. எனவே, அவரது சாவில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. கட்டிட பணிகள் நடைபெறும் இடத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதில் பதிவான காட்சிகளை நாங்கள் பார்க்க வேண்டும் என்று கூறி அதை கேட்டோம். ஆனால் அவர்கள் அதை தரமறுத்துவிட்டனர். இறந்துபோன நரேஷ்குமார் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும். அதுவரை அவரது உடலை நாங்கள் வாங்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story