உருமாறும் ரோபோ அலமாரி


உருமாறும் ரோபோ அலமாரி
x
தினத்தந்தி 12 Jun 2017 2:33 PM IST (Updated: 12 Jun 2017 2:32 PM IST)
t-max-icont-min-icon

குறைந்த இடத்தை பல பயன்களுக்கும் உகந்த வகையில் பயன்படுத்த இந்த அலமாரி உருவாக்கப்பட்டுள்ளது.

கர்ப்புற வாழ்க்கையில் இட நெருக்கடியை சமாளிப்பதற்காக உருமாறும் ரோபோ அலமாரியை உருவாக்கி உள்ளார் அமெரிக்க மாணவர். எம்.ஐ.டி. கல்வி மைய பேராசிரியர், கென்ட் லார்சன் வழிகாட்டலில், மாணவர் ஹசியர் லாரியா இதை வடிவமைத்துள்ளார். அவர்கள் ‘சிட்டி ஹோம்’ என்ற பெயரில் இந்த அலமாரியை உருவாக்கினார்கள்.

குறைந்த இடத்தை பல பயன்களுக்கும் உகந்த வகையில் பயன்படுத்த இந்த அலமாரி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதியில் உள்ளடங்கி இருக்கும் வகையில் கட்டில் மெத்தை இணைக்கப்பட்டுள்ளது. அதன் எதிர்புறத்தில் கணினிகளை வைத்து அலுவல் செய்யும் விதமாக சிறிய மேடை உள்ளது. வீட்டில் இது வரவேற்பறை பணிகளை செய்யவும், அல்லது சிறிய அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்றது இந்தப் பகுதி. 

மேற்புறம் முழுவதும் டி.வி., புத்தகங்கள், உடைகள், பாதுகாப்பு பெட்டகம் என பலவிதமான பயன்பாட்டிற்கான ‘கப்போர்டு’கள், திறந்த அறைகள் உள்ளன. அடிப்புறத்தில் சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளதால், எளிதில் அலமாரியை இடம் மாற்றி வைக்கலாம். பொத்தானை அழுத்துவதன் மூலம், படுக்கையை வெளியே கொண்டு வருதல், அலமாரியை இடம் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். ஐ.ஓ.எஸ்., ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வழியாகவும் இதை இயக்கலாம். மின்சார இணைப்பு இல்லாதபோது, பொத்தான் இல்லாமல் கைகளாலும் இதன் இயக்கங்களை செய்ய முடியும். 

‘ஒரி சிஸ்டம்ஸ்’ நிறுவனம் இந்த நவீன அலமாரியை தயாரித்து விற்பனை செய்ய முன்வந்துள்ளது. அடுத்த ஆண்டில் பொது விற்பனைக்கு வர இருக்கிறது இந்த நவீன அலமாரி.

Next Story