டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 145 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
இந்த டாஸ்மாக் கடைகளுக்கு மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கடைகளை திறக்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைந்ததால் கிராமப்புறங்களில் தற்போது இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் மதுகுடிப்பவர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடை பகுதியில் வீண்தகராறு அதிகரித்து வருகிறது. அதன்படி, விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு வருபவர்களின் தொல்லையால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, சாலைமேடு டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முற்றுகை
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலாமேட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வருபவர்களால் தினம், தினம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் எங்கள் பகுதி பெண்கள், பள்ளி- கல்லூரி மாணவிகள் மிகவும் அச்சத்தில் உள்ளார் கள். எனவே இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும், இல்லையெனில் எங்கள் போராட்டம் தொடரும் என்று முறையிட்டனர்.
இதனை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story