ரூ.2½ லட்சம் மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேசின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு


ரூ.2½ லட்சம் மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேசின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 13 Jun 2017 4:00 AM IST (Updated: 13 Jun 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

கோவையை சேர்ந்தவரிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

கோவை,

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் இடைத்தரகராக செயல்பட்டவர் சுகேஷ் (வயது 35). தற்போது இவர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டில் இவர் கோவை கணபதி பகுதியை சேர்ந்த ராஜவேலு (40) என்பவரிடம் கர்நாடக மாநிலம் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து, இணை செயலாளர் சுகேஷ் என்ற பிரகாஷ் பேசுவதாக கூறினார். மேலும் அவர், பெல்லாரி மாநகராட்சியில் சமையல் உபகரணங்கள் டெண்டர் எடுத்துக்கொடுப்பதாக கூறி ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் பெற்றார். பின்னர் அவர் அந்த டெண்டரை எடுத்துக்கொடுக்க வில்லை. அத்துடன் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்தார்.

கோவை கோர்ட்டில் ஆஜர்

இதுதொடர்பாக ராஜவேலு கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் சுகேஷ் மற் றும் அவருடைய தந்தை சந்திரசேகர் ஆகியோர் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே சென்றனர்.

இந்த மோசடி வழக்கு கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு சந்திரசேகர் மட்டுமே ஆஜராகி வந்தார். சுகேஷ் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் திகார் சிறையில் இருக்கும் சுகேசை கடந்த வாரம் கோவை அழைத்து வந்து 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் டெல்லிக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

ஜாமீன் மனு தள்ளிவைப்பு

இதற்கிடையே இந்த வழக் கில் ஜாமீன் கேட்டு சுகேஷ் சார்பில் அவருடைய வக்கீல் மூலம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) நம்பிராஜன் உத்தரவிட்டார்.

Next Story