ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி


ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஊட்டி,

120 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் தேவாலயம் ஊட்டியில் உள்ளது. இந்த தேவாலயம் பாரம்பரியம் மிக்க கட்டிடமாகும். ஊட்டிக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஆலயத்திற்கு வர தவறியதில்லை.

தேர்பவனி

இத்தகைய பெருமை பெற்ற தூய இருதய ஆண்டவர் ஆலய 120-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை வழங்குவது மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

நேற்றுமுன்தினம் காலை 9 மணிக்கு நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் நன்றி திருப்பலி நடந்தது.

இதை தொடர்ந்து தேர் பவனி நடந்தது. இதை ஆலய பங்கு தந்தை ஜான் ஜோசப் ஜெபம் செய்து, தொடங்கி வைத்தார்.

அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏசு சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. இதனை கிறிஸ்தவர்கள் தொட்டு வழிபட்டு சென்றனர். பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பாடல்கள் பாடியபடியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடியும் சென்றனர்.

ஆராதனை

இந்த தேர்பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலை, சேரிங்கிராஸ் பகுதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து நற்கருணை ஆராதனையுடன் திருவிழா நிறைவடைந்தது.

Next Story