பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜி.எஸ்.டி. சட்டவிதிகள், வரி விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும்
வணிகர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜி.எஸ்.டி. சட்டவிதிகள், வரி விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை
திருச்சி,
திருச்சிக்கு வருகை தந்திருந்த மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொருளாளர் வெ.கோவிந்தராஜுலு, திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்ச்செல்வம், மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஜி.எஸ்.டி. சட்டத்தின் வரி விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும், ஜூலை 1-ந் தேதி அமல்படுத்துவதை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அப்போது தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
கோரிக்கை மனுவில், தற்போதைய நிலையில் உள்ள ஜி.எஸ்.டி. சட்டத்தை தமிழக வணிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், எனவே வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மனப்பூர்வமாக ஏற்றிடும் வகையில் ஜி.எஸ்.டி. சட்டத்தில் சட்டவிதிகள் மற்றும் வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story