எதிராக சாட்சி சொன்னதால் ஆத்திரம்: முதியவர் கழுத்தை அறுத்து கொலை வாலிபர் கைது
புதுவையில் கொலை வழக்கில் எதிராக சாட்சி சொன்னதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முருங்கப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்தவர் குமார் என்ற கலியபெருமாள்(வயது 60). ஓய்வு பெற்ற ரோடியர் மில் ஊழியர். இவரது இரண்டாவது மகள் சக்திபிரியா. இவருக்கும் முருங்கப்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்த அமலன் என்ற லூர்துநாதன்(32) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. இது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. எனவே அவர் அமலனுடன் இருந்த பழக்கத்தை துண்டித்துக் கொண்டார். இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அமலன் சம்பவத்தன்று 100 அடி ரோட்டில் சக்திபிரியாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
எதிராக சாட்சி
இந்த வழக்கு விசாரணை புதுவை கோர்ட்டில் தற்போது நடந்து வருகிறது. இந்த வழக்கில் சக்திபிரியாவின் தந்தை கலியபெருமாள் முக்கிய சாட்சியாக உள்ளார். அவருடன் சேர்ந்து 7 பேர் சாட்சிகளாக உள்ளனர். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலனுக்கு எதிராக கலியபெருமாள் சாட்சி சொன்னதாக தெரிகிறது. இதனால் கோர்ட்டு வளாகத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
கழுத்தை அறுத்து கொலை
இந்த நிலையில் கலியபெருமாள் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அமலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கலியபெருமாளின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். கலியபெருமாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலியபெருமாளின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இதனை தொடர்ந்து முதலியார்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து அமலனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் முருங்கப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அமலனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story