மணல் குவாரிகளை திறக்கக் கோரி மேலூரில் கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மணல் குவாரிகளை திறக்கக் கோரி மேலூரில் கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2017 3:41 AM IST (Updated: 13 Jun 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து மணல் குவாரிகளையும் திறக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று மேலூரில் கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலூர்,

தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடியதால் ஆயிரக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.

இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று மேலூரில் கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வைகை கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் நாகலிங்கம் தலைமை தாங்கினார். மேலூர் கிளை தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். இதில் அனைத்து பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெண் தொழிலாளர்கள்

ஆர்ப்பாட்டத்தில் தலையில் காலியான தட்டுகளுடன் ஏராளமான பெண் தொழிலாளர்கள் கண்டன கோஷமிட்டனர்.

அதில் தமிழக அரசு உடனே அனைத்து மணல் குவாரிகளையும் திறக்க உத்தரவிட வேண்டும். வேலை வாய்ப்பு இழந்த அனைவருக்கும் உதவித்தொகை மற்றும் நிவாரணங்களை வழங்க வேண்டும்.
கட்டிட கட்டுமானவேலைகள் தொடங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story