நெல்லை அருகே குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


நெல்லை அருகே குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 Jun 2017 1:00 AM IST (Updated: 13 Jun 2017 7:09 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகதை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை அருகே குடிநீர் கேட்டு பஞ்சாயத்து அலுவலகதை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

நெல்லை அருகே உள்ள மேல தாழையூத்து பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மதியம் தாழையூத்து பஞ்சாயத்து அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலக வளாகத்தில் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை


இதுபற்றி தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் அங்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மானூர் யூனியன் அதிகாரிகளும் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்தனர். அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ‘‘குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட பிரச்சினையால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த குழாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் சரிசெய்து சீராக குடிநீர் வழங்கப்படும்’’ என்று உறுதி அளித்தனர்.

இதை ஏற்றுக் கொண்டு பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story