ஸ்டுடியோ உரிமையாளரின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு டிரைவர் கைது
செலவுக்கு பணம் தர மறுத்த ஸ்டுடியோ உரிமையாளரின் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி,

பணம் கேட்டு தகராறு
ஆறுமுகநேரி காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் மில்லர். இவர் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக வேன் உள்ளது. அதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை (45) ஓட்டி வந்தார். தற்போது அவரிடம் அண்ணாத்துரை வேலை பார்க்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாத்துரை, மில்லரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். தரமறுத்த மில்லரிடம் அண்ணாத்துரை தகராறு செய்துள்ளார். அக்கம் பக்கத்தினர் தலையிட்டதால், அண்ணாத்துரை அங்கிருந்து சென்று விட்டார்.
மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு
நேற்று அதிகாலையில் மில்லரின் வீடு முன்பு மண்எண்ணெய் கேனுடன் அண்ணாத்துரை வந்துள்ளார். அங்கு வீடு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மில்லரின் மோட்டார் சைக்கிள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே அண்ணாத்துரை தப்பி ஓடி விட்டார். தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிளை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். ஆனாலும் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாத்துரையை கைது செய்தனர்.
விஜயகாந்தின் முன்னாள் டிரைவர்
கைதான அண்ணாத்துரை கடந்த 1994–ம் ஆண்டு முதல் 2003–ம் ஆண்டு வரையிலும் நடிகர் விஜயகாந்திடம் டிரைவராக இருந்து உள்ளார். பின்னர் அண்ணாத்துரை, நடிகர் விஜயகாந்தின் மேலாளர் சாய் வெங்கடேசிடம் டிரைவராக இருந்து உள்ளார். கடந்த 2004–ம் ஆண்டு மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் அண்ணாத்துரை ஸ்குரூ டிரைவரால் சாய் வெங்கடேசின் கழுத்தில் குத்திக் கொலை செய்தார். இதனால் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த அண்ணாத்துரை பின்னர் பல்வேறு இடங்களில் தற்காலிக டிரைவராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story