கட்டுமானத்தொழில் முடங்கி கிடப்பதால் பத்திரப்பதிவு கட்டணத்தை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்
தமிழகத்தில் கட்டுமானத் தொழில் முடங்கி கிடப்பதால், பத்திரப்பதிவு கட்டண உயர்வை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று
சென்னை,
சென்னை இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (கிரெடாய்) சென்னை கிளை தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நிலத்திற்கான வழிகாட்டல் மதிப்பு
தமிழக அரசு சமீபத்தில் நிலத்திற்கான வழிகாட்டல் மதிப்புகளை 33 சதவீதமாக குறைத்தது. இதனை இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கம் முழுமையாக வரவேற்கிறது. சந்தை மதிப்பை விட வழிகாட்டல் மதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது.
ஆனால் பத்திரப்பதிவு கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம், வழிகாட்டல் மதிப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய ஆதாயப்பலன்கள் ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டில் அறிமுகம்
வழிகாட்டல் மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்படக் கூடிய வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு பத்திரப்பதிவு கட்டணத்தை 3 சதவீதமாக உயர்த்தி உள்ளது. குறிப்பாக 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள பத்திரப்பதிவு கட்டண நடவடிக்கையை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் பத்திரப்பதிவு கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. பத்திரப்பதிவு துறையின் வருமானம் குறைந்து விடக்கூடாது என்பதற்காகவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம். இது தொழில் துறை மீதும் பொதுமக்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, பத்திரப்பதிவு கட்டணத்தை ஏற்கனவே இருந்தது போல் 1 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும். இது தொடர்பாக சங்கம் சார்பில் அரசுக்கும் கோரிக்கை விடுக் கப்பட்டு உள்ளது. தவறும் பட்சத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளால், வீட்டு விலை உயர வாய்ப்பு உள்ளது.
செயற்கை மணல்
குவாரிகள் மூடல், விலை ஏற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எம்.சாண்ட் என்ற செயற்கை மணல் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயன் படுத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் செயற்கைமணல் தயாரிப்பவர்கள் குறைவாக இருப்பதுடன், இந்த வகை செயற்கைமணல் கான்கிரீட் உள்ளிட்ட ஒரு சில பணிகளுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
டைல்ஸ், மார்பிள்ஸ் போன்றவற்றை பதிப்பதற்கு ஆற்று மணல் தான் பயன்படுத்த முடியும். முற்றிலும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டால் செயற்கை மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு மாதமாக கட்டுமான தொழில் முடங்கி கிடக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்தொழில்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்க செயலாளர் சிவகுருநாதன் மற்றும் ஹபீப் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story