ரூ.28 லட்சம் செலவில் தடுப்பணைகள் ஆந்திர அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வெளியகரம் ஏரி நீர் வரத்து கால்வாய் மீது ஆந்திர அரசு ரூ.28 லட்சம் செலவில் தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வெளியகரம் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு ஆந்திர மாநிலம் புள்ளூர் அருகே குசா ஆற்றில் இருந்து வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரின் மூலம் தமிழகத்தை சேர்ந்த வெளியகரம், இருதலைவாரிபட்டடை, வெளியகரம் காலனி போன்ற கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
இந்த நிலையில் இந்த வரத்து கால்வாயின் மீது ஆந்திர மாநிலம் நிலவாய் என்ற இடத்தில் 5 இடங்களில் ரூ. 28 லட்சம் செலவில் ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டும் பணியை தொடங்கி உள்ளது.
இந்த தகவல் கிடைத்ததும் வெளியகரம் மற்றும் இரு தலைவாரிப்பட்டடை, வெளியகரம் காலனி போன்ற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தடுப்பணை கட்டும் இடத்தில் ஆந்திர அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறையை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டனர். தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு தாசில்தார் வெங்கடேசன் மற்றும் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன் தலைமையில் தமிழக போலீசார் அங்கு சென்றனர்.
ஆந்திர அரசுக்கு சொந்தமானது
அப்போது ஆந்திர மாநில அதிகாரிகள் வெளியகரம் ஏரி வரத்து கால்வாய் ஆந்திர அரசுக்கு சொந்தமானது என்று வாதிட்டனர். ஆனால் பள்ளிப்பட்டு முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் ராஜேஸ்வரி ரவீந்திரநாத் தலைமையிலான தமிழக விவசாயிகள் அந்த கால்வாய் மூலம் வரும் நீர் வெளியகரம் ஏரிக்கு சொந்தமானது என்றும், இதுநாள் வரை அந்த வரத்து கால்வாயில் இருந்து வரும் நீர் ஆந்திர நிலங்களுக்கு பயன்படவில்லை என்றும் அதனால் தடுப்பணை கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த வரத்து கால்வாய் எந்த மாநிலத்திற்கு சொந்தமானது என்பதை உறுதி செய்து கொள்ள நாளை (வியாழக்கிழமை) மீண்டும் இரு மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இது குறித்து தமிழக பொதுப்பணித்துறையினருக்கும், நீர்பாசன வளத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டும் அவர்கள் யாரும் உரிய நேரத்தில் வராததால் இந்த பிரச்சினைக்கு முடிவு ஏற்படவில்லை.

Related Tags :
Next Story