செய்யூர் அருகே மறியலில் ஈடுபட்டு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரில் அனல் மின்நிலையம் அமைக்க பணிகள் நடைபெறுகிறது.
மதுராந்தகம்,
இதற்கு தேவையான நிலக்கரி கொண்டு செல்வதற்காக சாலை அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி செய்யூரை அடுத்த விலம்பூர் பகுதியில் நடைபெற்றது.
குடியிருப்புகள் அதிகமாக உள்ள விலம்பூர் பகுதியில் சாலை அமைப்பதால் பொதுமக்கள் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள். ஆகவே மாற்று பாதை அமைக்க வேண்டும் என்று கூறி அந்த பகுதி மக்கள் விலம்பூர் பகுதியில் பனையூர்– வெடால் சாலையில் மறியலில் ஈடுபட்டு அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்த செய்யூர் தாசில்தார் ராமசந்திரன், சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்று பாதையில் சாலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story