கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு செலவில் தனியார் பள்ளியில் பயில விண்ணப்பிக்கலாம்


கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு செலவில் தனியார் பள்ளியில் பயில விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 14 Jun 2017 3:45 AM IST (Updated: 14 Jun 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு செலவில் தனியார் பள்ளியில் பயில விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் அலுவலர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,

நாகை சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலர் வெங்கடேசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய நிதியினை பயன்படுத்தி அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை பயின்ற மற்றும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 2017-2018-ம் கல்வி ஆண்டிற்கு 6-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் அரசு செலவில் தனியார் பள்ளியில் கல்வி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் 6 மற்றும் 11-ம் வகுப்பில் தனியார் பள்ளியில் சேர்ந்து அரசு செலவில் பயில விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் நாகையில் உள்ள தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story