மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்


மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:00 AM IST (Updated: 14 Jun 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகலில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா 10 நாட்கள் நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், கஞ்சி வார்த்தலும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதை முன்னிட்டு முடிகொண்டான் ஆற்றுக் கரையில் இருந்து பால்காவடி, அலகு காவடி என பல்வேறு காவடிகளை திரளான பக்தர்கள் எடுத்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மகாமாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

நேர்த்திக்கடன்

இதையடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்னவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திருமருகல், கரையிருப்பு, சேகல், ஆண்டித்தோப்பு, செட்டிக்குளத்தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களும் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், திருமருகல் கிராம மக்களும் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story