ஆற்றில் நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கிடா வெட்டி, படையல் பூஜை


ஆற்றில் நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கிடா வெட்டி, படையல் பூஜை
x
தினத்தந்தி 14 Jun 2017 4:15 AM IST (Updated: 14 Jun 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் கிராமத்தின் அருகில் உள்ளது தாலாத்து ஆறு. இந்த ஆற்றில்தான் இந்து மத கோவில்களில் நடக்கும் சகலவிதமான விழாக்களுக்கும் சக்தி கரகம் பாலிப்பார்கள்.

உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் கிராமத்தின் அருகில் உள்ளது தாலாத்து ஆறு. இந்த ஆற்றில்தான் இந்து மத கோவில்களில் நடக்கும் சகலவிதமான விழாக்களுக்கும் சக்தி கரகம் பாலிப்பார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சக்தி கரகம் பாலிக்கும் இடத்தில் மர்ம மனிதர்கள் சிலர் கிடா வெட்டி, பொங்கல் வைத்து, 18 படையலிட்டு பூஜை செய்துள்ளனர். பூஜை செய்தவர்கள் யார்?, எதற்காக பூஜை செய்தார்கள்? பூஜையில் பலியிடப்பட்ட கிடாயை ஏன் எடுத்துச்செல்லாமல் அங்கேயே போட்டுவிட்டு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story