மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பிறப்பு, இறப்பு பதிவு குறித்த பயிற்சி வகுப்பு


மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பிறப்பு, இறப்பு பதிவு குறித்த பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 14 Jun 2017 4:26 AM IST (Updated: 14 Jun 2017 4:26 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பிறப்பு, இறப்பு பதிவு குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் தொடங்கி வைத்தார்

மதுரை

பிறப்பு, இறப்பு பதிவு குறித்து மதுரை உள்பட 9 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.

பயிற்சி வகுப்பு

பிறப்பு, இறப்பு பதிவு குறித்து மதுரை உள்பட 9 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான பயிற்சி வகுப்பு மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:–

பிறப்பு, இறப்பு நிகழ்ந்து ஒரு வருடம் வரை பதியப்படாமல் காலம் தவறிய பதிவுகளை பதிவு செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெறுவதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று பதிவு செய்ய அரசு உத்தரவு அளித்துள்ளது.

வருவாய் அலுவலர்கள்

இந்த பயிற்சி வகுப்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சி வகுப்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இணை இயக்குனர் சவுந்தரராசன் பயிற்சி அளித்தார். இதில் துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்)அர்ஜுன்குமார், உதவி இயக்குனர்(பிறப்பு, இறப்பு) அப்துல்கரீம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story