வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் ஜூலை 9, 23-ந்தேதிகளில் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற ஜூலை மாதம் 9-ந்தேதி மற்றும் 23-ந்தேதிகளில் நடக்கிறது.
தர்மபுரி,
இதுகுறித்து கலெக்டர் விவேகானந்தன் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில் தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை நீக்கவும், வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இந்த பணிகளின் போது எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 18 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க தற்போது நடைபெறும் தொடர் திருத்த காலத்தை பயன்படுத்தி கொள்ளலாம். வருகிற ஜூலை மாதம் 31-ந்தேதி வரை நடைபெறும் சிறப்பு பணியின்போது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இதேபோல் இ-சேவை மையங்களில் இருந்து தமிழக தேர்தல் ஆணைய இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் வருகிற ஜூலை மாதம் 9-ந்தேதி மற்றும் 23-ந்தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கான முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவார்கள். மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதிக்குள் ஏதாவது 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
இந்த சிறப்பு முகாமில், இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கும் பணியும் நடைபெற உள்ளது. இறப்பு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களில் இருந்து பெறப்பட்டு அதன் அடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story