திசையன்விளை அருகே காய்த்து குலுங்கும் ஆப்பிள்


திசையன்விளை அருகே காய்த்து குலுங்கும் ஆப்பிள்
x
தினத்தந்தி 15 Jun 2017 2:00 AM IST (Updated: 14 Jun 2017 5:32 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டு தோட்டத்தில் சுமார் 40 அடி உயர ஆப்பிள் மரம் உள்ளது. அந்த மரம் இப்போது காய்த்து குலுங்குகிறது.

திசையன்விளை,

திசையன்விளை அருகே உள்ள இடைச்சிவிளையை சேர்ந்தவர் வேல்சாமி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டு தோட்டத்தில் சுமார் 40 அடி உயர ஆப்பிள் மரம் உள்ளது. அந்த மரம் இப்போது காய்த்து குலுங்குகிறது.

இதுபற்றி அவர் கூறுகையில், நான் 1980–ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றேன். வீட்டை சுற்றி தோட்டம் அமைத்தேன். அதில் விதவிதமான மரங்கள், மூலிகை செடிகளை வளர்க்க விரும்பினேன். சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் விதவிதமான மரக்கன்று மற்றும் மூலிகை செடிகளை வாங்கி வருவேன். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா சென்றபோது, இந்த ஆப்பிள் செடியை வாங்கி வந்தேன். ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீர் ஊற்றி வளர்த்தேன். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தினேன்.

7 ஆண்டுகளில் மரம் பூத்து குலுங்கியது. முதலில் 10 முதல் 15 ஆப்பிள்கள் மட்டுமே காய்த்தது. 7 ஆண்டுகளுக்கு பிறகு அதிக பூக்கள் பூக்க ஆரம்பித்து இப்போது ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்பிள் காய்க்கிறது. ஆண்டுதோறும் மே, ஜூன் மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2 முறை ஆப்பிள் கொத்து கொத்தாய் காய்த்து வருகிறது. இந்த மரத்தில் காய்க்கும் ஆப்பிள்களை குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து வருவதாக வேல்சாமி கூறினார்.

Next Story