மோட்டார் சைக்கிளில் இருந்து பள்ளத்தில் விழுந்த தொழிலாளி சாவு
தூத்துக்குடியில் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பள்ளத்தில் விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி,

கட்டிட தொழிலாளி
தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் சாமிநத்தத்தை சேர்ந்தவர் அம்புரோஸ். இவருடைய மகன் மைக்கேல்ராஜ்(வயது 36). கட்டிட தொழிலாளி. இவருடைய அக்கா வீடு மற்றும், அவருக்கு சொந்தமான தோட்டம் தூத்துக்குடி அருகே உள்ள வீரநாயக்கன்தட்டு பகுதியில் உள்ளது. இவர் நேற்று முன்தினம் மாலையில் வீரநாயக்கன்தட்டு பகுதியில் உள்ள அக்கா வீட்டுக்கு வந்தாராம். பின்னர் தனது தோட்டத்துக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.
பள்ளத்தில் விழுந்தார்
அவர் தூத்துக்குடி எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை கடந்து சிறிது தூரம் சென்ற போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சரிந்து ரோட்டில் விழுந்தார். சிறிது தூரம் மோட்டார் சைக்கிளுடன் ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்ட அவர், பாலத்தின் அருகே ரோட்டில் இருந்து சுமார் 20 அடி பள்ளத்துக்குள் அவர் விழுந்து பலத்த காயம் அடைந்தார். மோட்டார் சைக்கிள் பள்ளத்தின் சரிவில் சிக்கிக் கொண்டது.
ஆஸ்பத்திரியில் சாவு
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விரைந்து சென்று பள்ளத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலையில் பரிதாபமாக அவர் இறந்தார். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்கு காரணம் என்ன?
மேலும் தூத்துக்குடி எம்.ஜி.ஆர்.நகர் ரெயில்வே பாலத்தில் புதிதாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரோட்டின் இருபுறங்களிலும் எந்தவித தடுப்புகளும் அமைக்கப்படவில்லை. அப்பகுதியில் மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் உடனடியாக மின்விளக்கு வசதி செய்வதுடன், சாலையோரத்தில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story