கோவில்பட்டியில், திருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை


கோவில்பட்டியில், திருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை
x
தினத்தந்தி 15 Jun 2017 1:30 AM IST (Updated: 14 Jun 2017 6:22 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் திருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் திருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

நூற்பாலை தொழிலாளி

கோவில்பட்டி இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் பாலமுருகன் (வயது 28). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டியைச் சேர்ந்த சண்முகலட்சுமிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தற்கொலை

இந்த நிலையில் பாலமுருகனுக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். குடும்பத்தினர் அவரை மீட்டு, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை பார்த்து மனைவி, பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story