முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வூதியத்துடன் படைப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் படை வீரர்கள் மறுவேலை வாய்ப்பு அடிப்படையில் அரசு துறைகளில் வேலை செய்வார்கள்.
நெல்லை,
ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வூதியத்துடன் படைப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் படை வீரர்கள் மறுவேலை வாய்ப்பு அடிப்படையில் அரசு துறைகளில் வேலை செய்வார்கள். அவ்வாறு வேலை செய்து, அந்த பணிக்கான ஓய்வூதியம் பெற்று வந்த போது உயிர் நீத்த தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் மனைவி மற்றும் வாரிசு தாரர்களுக்கு ராணுவ குடும்ப ஓய்வூதியத்துடன், அரசு துறையில் பணிபுரிந்ததற்கான குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும்.
1.4.2003–ம் தேதிக்கு முன்பு அரசு குடிமைப்பணியில் மறு வேலை வாய்ப்பு பெற்று பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் பெற்றுள்ள முன்னாள் படை வீரர்கள் குடும்பத்துக்கு மட்டுமே இது பொருந்தும்.
எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இதுபோன்ற முன்னாள் படை வீரர்களை சேர்ந்த விதவையர் தங்களது கணவர் மறு வேலை வாய்ப்பு பெற்று பணி புரிந்த அரசு அலுவலகங்களை அணுகி இந்த குடும்ப ஓய்வூதியத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை, நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story