கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் சேதம்
கோவில்பட்டியில், தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் சேதம் அடைந்தன.
கோவில்பட்டி,

பயங்கர தீ விபத்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுல்தான்பாய்(வயது 35). இவர் கோவில்பட்டி ஜோதி நகர் 4–வது தெருவில் வாடகை கட்டிடத்தில் புதிதாக பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலை அமைத்து உள்ளார். மருந்து முக்கிய தீக்குச்சிகளை தீப்பெட்டிகளில் அடைத்து, பண்டல் போடும் வகையில் புதிய எந்திரங்களை நிறுவி உள்ளார். ரம்ஜான் தினத்தில் இருந்து பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலையை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் புதிய எந்திரங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த பணியில் மதுரையை சேர்ந்த அலிபாபா(40) ஈடுபட்டு இருந்தார். அப்போது மின்கசிவு காரணமாக திடீரென்று எந்திரத்தின் அருகில் தீப்பிடித்தது. அப்போது அங்கிருந்த தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதும் தீ பரவியதால், கட்டிடம் முழுவதும் மள, மளவென்று தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த அலிபாபா உயிர்தப்பி வெளியில் ஓடி வந்தார்.
பல லட்சம் ரூபாய் சேதம்
இதுகுறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கும், கிழக்கு போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு நிலைய அதிகாரி வீரலட்சுமணன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர்.
தீ விபத்தில் கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு தகடுகள் முழுவதும் வெடித்து சிதறி சரிந்து விழுந்தன. மேலும் கட்டிட சுவரிலும் விரிசல்கள் விழுந்தன. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், தீப்பெட்டி மூலப்பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
இந்த தீவிபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story