கல்லிடைக்குறிச்சியில் பயங்கரம் மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு


கல்லிடைக்குறிச்சியில் பயங்கரம் மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Jun 2017 2:00 AM IST (Updated: 14 Jun 2017 8:51 PM IST)
t-max-icont-min-icon

கல்லிடைக்குறிச்சியில் மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அம்பை,

கல்லிடைக்குறிச்சியில் மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மூதாட்டி

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொன்மாநகர் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவி புஷ்பம் (வயது 65). கருப்பையா இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு ஜெயசிங் உள்பட 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ஜெயசிங் மட்டும் தனது தாயார் புஷ்பத்துடன் வசித்து வந்தார். ஜெயசிங்கின் மனைவி தனது 2 குழந்தைகளுடன் சாம்பவர்வடகரையில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார். ஜெயசிங் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார்.

கழுத்தை அறுத்துக் கொலை

நேற்று காலை ஜெயசிங் வழக்கம்போல் மில்லுக்கு வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மாலை 5 மணியளவில் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் புஷ்பம் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து ஜெயசிங் கதறி அழுதார்.

இதுகுறித்து உடனடியாக கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் சபியுல்லா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

காரணம் என்ன?

மோப்பநாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு வீட்டின் பின்பக்கம் உள்ள தெருவில் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. புஷ்பம் அணிந்திருந்த கம்மல், தங்கச்சங்கிலி உள்ளிட்டவற்றை காணவில்லை என்று போலீசாரிடம் ஜெயசிங் தெரிவித்தார். எனவே நகைக்காக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story