சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2017 4:15 AM IST (Updated: 15 Jun 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,


தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். மாணிக்கம், வேலாயுதம் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு அரசு விதிப்படி மாதா மாதம் ஓய்வூதியம் வழங்கவேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்து 50 வழங்கவேண்டும், மருங்காபுரி ஒன்றியத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு 8 ஆண்டுகளாக சேமநல நிதி வழங்கப்படாமல் இருப்பதால் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க கோருவது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சிராஜுதீன் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story