ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு
மதுரை,
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை பகுதி குடிநீர் தேவைக்காக சிவகங்கை நகராட்சி கமிஷனர் சார்பில் எங்கள் பகுதியில் செல்லும் வைகை ஆற்றினுள் புதிதாக 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே வைகை ஆற்றினுள் புதிதாக அமைக்கப்பட்ட 3 ஆழ்துளை கிணறுகளை மூடி அகற்றவும், எதிர்காலத்தில் இடைக்காட்டூர் பகுதியில் வைகை ஆற்றினுள் கிணறுகள் அமைக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் சிவகங்கை கலெக்டர், சிவகங்கை தாசில்தார் மற்றும் நகராட்சி கமிஷனர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 26–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.