அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 15 Jun 2017 4:00 AM IST (Updated: 15 Jun 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

மேலக்குடிகாடு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்துள்ள மேலக்குடிகாடு கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வினைதீர்த்த விநாயகர், பூவாடைக்காரி, அக்கினிவீரன், மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பசாமி, பைரவநாகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதியும் உள்ளது. அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானங்களின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையடுத்து நேற்று முன் தினம் முதற்கால யாக பூஜை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பிரவேச பலி நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து காலை 8.30 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பரிவார தெய்வங்களான வினைதீர்த்த விநாயகர், பூவாடைக்காரி, அக்கினி வீரன், மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பசாமி, பைரவநாகநாதர் சுவாமிகளின் மூலஸ்தான விமானத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அய்யனார் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் மேலக்குடிகாடு, தென்கச்சி பெருமாள்நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பொறுப்பாளர் மனோகர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story