ஆம்னி பஸ்-லாரி நேருக்குநேர் மோதல் 15 பேர் காயம்
கீழ்வேளூர் அருகே ஆம்னி பஸ்-லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
கீழ்வேளூர்,
கன்னியாகுமரியில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு நேற்று காலை ஒரு தனியார் ஆம்னி பஸ் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது கீழ்வேளூரை அடுத்த ராமர்மடம் என்ற இடத்தில் வந்த போது எதிரே காரைக்காலில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு மரத்தூள் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியும், ஆம்னி பஸ்சும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டது. பஸ்சும், லாரியும் மோதிக்கொண்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டனர்.
15 பேர் காயம்
இதில் லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஜி.எஸ்.டி. ரோட்டை சேர்ந்த குமார் (வயது30), ஆம்னி பஸ் டிரைவர் கன்னியாகுமரி பிளான்தோட்டத்தை சேர்ந்த யூசோப்(26), பஸ்சில் பயணம் செய்த பயணிகள் வேளாங்கண்ணி காந்திநகரை சேர்ந்த ராபிஸ்தன்(30), தூத்துக்குடி வழுத்தான்குப்பம் பகுதியை சேர்ந்த பிரின்ஸ்(31), அவருடைய மனைவி லிகின்(22), வழுத்தான்குப்பம் ஸ்டெல்லா(45), கன்னியாகுமரியை சேர்ந்த சுரேஷ்(36), கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த யோகாஸ்(58), மார்த்தாண்டம் கல்விளை பகுதியை சேர்ந்த எலிசா, கன்னியாகுமரி சின்னதுறை மார்க்கெட் ரோட்டை சேர்ந்த அலெக்சாண்டர்(38), அவருடைய மனைவி சுகன்யா (30) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தால் நாகை - திருவாரூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஆறுதல்
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர்தேஷ்முக் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story