சுசீந்திரம் அருகே கஞ்சா வியாபாரி கைது
சுசீந்திரம் அருகே கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வழுக்கம்பாறை, பல்பநாதன்புதூர் பகுதியில் வரும்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையின்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறினார். உடனே அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் அஞ்சுகிராமம் அருகே உள்ள சாலைபுதூர்காலனியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற கஞ்சா கிருஷ்ணன்(வயது42) என்பதும், கஞ்சா வியாபாரி என்றும், அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கைது
மேலும், அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் ஒருகிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் போலீசார் அவரை கைது செய்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் மீது தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, அருமனை, அஞ்சுகிராமம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் கொலை முயற்சி வழக்கும், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய போலீஸ் நிலையங்களில் அடி–தடி வழக்குகளும் உள்ளது.
கிருஷ்ணனை ஏற்கனவே 4 முறை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
குண்டர் சட்டத்தில் கைதானவர்
கடந்த 2016–ம் ஆண்டு போலீசார் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு விடுதலையான இவர், மீண்டும் 5–வது முறையாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது போலீசாரிடம் சிக்கி உள்ளார்.

Related Tags :
Next Story