ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2017 4:59 AM IST (Updated: 15 Jun 2017 4:58 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூரை அடுத்த காமலாபும் ஊராட்சி காட்டூரில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஓமலூர்,

 இப்பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஊராட்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ஓமலூர்–நாலுகால்பாலம் ரோட்டில் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் முருகன், சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Next Story