நீச்சல் குளத்தில் தவறி விழுந்து லண்டன் சிறுவன் பலி
நவிமும்பையில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து லண்டன் சிறுவன் உயிரிழந்தான்.
மும்பை,
நவிமும்பையில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து லண்டன் சிறுவன் உயிரிழந்தான்.
லண்டன் சிறுவன்லண்டனை சேர்ந்த 4½ வயது சிறுவன் மன்பீர். இவனது தாத்தா, பாட்டி நவிமும்பை கார்கரில் வசித்து வருகின்றனர். மன்பீரும் கடந்த ஒரு வருடமாக தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்தான்.
அவனது தாய் அவ்வப்போது மகனை வந்து பார்த்து செல்வார். இந்தநிலையில், அவனை பள்ளியில் சேர்ப்பதற்கு முடிவு செய்த தாய் மீண்டும் லண்டனுக்கு அழைத்து செல்வதற்காக வந்திருந்தார்.
நீச்சல் குளத்தில் மிதந்தான்சம்பவத்தன்று மன்பீரை அழைத்துக் கொண்டு அவனது தாய் அங்குள்ள ஹைட்பார்க் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வரும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். கட்டிட வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மன்பீர் திடீரென காணாமல் போனான்.
அவனை தேடி அலைந்த போது, அங்குள்ள நீச்சல் குளத்தில் அவன் பிணமாக மிதந்து கொண்டிருந்தான். இதை பார்த்து பதறி போன அவனது தாய் கதறி அழுதார்.
தவறி விழுந்து சாவுதகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மன்பீர் விளையாடி கொண்டிருந்த போது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இறந்து போனது தெரியவந்தது.
அந்த நீச்சல் குளம் தற்போது பயன்பாட்டில் இல்லை என்பதும் தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.