தட்டார்மடம் அருகே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்


தட்டார்மடம் அருகே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Jun 2017 3:00 AM IST (Updated: 15 Jun 2017 6:35 PM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.

தட்டார்மடம்,

தட்டார்மடம் அருகே மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.

மனுநீதி நாள் முகாம்

தட்டார்மடம் அருகே உள்ள புத்தன்தருவை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தலா 14 பேருக்கு முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணை, 12 பேருக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணை, தலா ஒருவருக்கு கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னி உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

கல்வி உதவித்தொகை

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 19 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.39 ஆயிரத்து 250, 8 பேருக்கு திருமண உதவித்தொகையாக ரூ.72 ஆயிரம், ஒருவருக்கு விபத்து நிவாரண உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500, 2 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 5 பேருக்கு வேலை அடையாள அட்டைகள், முதல்–அமைச்சரின் பசுமை வீடு திட்டத்தில் ஒருவருக்கு ரூ.33 ஆயிரத்துக்கான காசோலை, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான வேலை உத்தரவு, வேளாண்மை துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு தெளிப்புநீர் பாசன கருவி, நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் மூலம் 2 பேருக்கு மண்வள அட்டை, 2 பயனாளிகளுக்கு தலா 200 நெட்டை, குட்டை தென்னங்கன்றுகள், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஒருவருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் காமராஜ், சாத்தான்குளம் தாசில்தார் ராஜீவ் தாகூர் ஜேக்கப், யூனியன் ஆணையாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story