ராதாபுரம் அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து பச்சை நிறத்தில் வந்த தண்ணீர்


ராதாபுரம் அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து பச்சை நிறத்தில் வந்த தண்ணீர்
x
தினத்தந்தி 16 Jun 2017 1:30 AM IST (Updated: 15 Jun 2017 7:38 PM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் அருகே இளையநைனார்குளத்தை சேர்ந்தவர் குணசேகர் (வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் மிளகாய், புடலை ஆகியவற்றை பயிரிட்டு உள்ளார்.

ராதாபுரம்,

ராதாபுரம் அருகே இளையநைனார்குளத்தை சேர்ந்தவர் குணசேகர் (வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் மிளகாய், புடலை ஆகியவற்றை பயிரிட்டு உள்ளார். ஆழ்துளை கிணறு மூலம் அந்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

இதனால் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க குணசேகர் முடிவு செய்தார். அதன்படி அவரது தோட்டத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. சுமார் 920 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தது. ஆனால் அந்த தண்ணீர் பச்சை நிறத்தில் இருந்தது. மேலும் தண்ணீரில் எண்ணெய் படலம் போல் மிதந்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் பரவியதும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு வந்து, பச்சை நிறத்தில் வந்த தண்ணீரை பார்த்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story